கத்தியைகாட்டி மிரட்டி டூ வீலர் & செல்போன் பறித்த இருவர் கைது

78பார்த்தது
டெக்ஸ் பார்க் அருகே இயற்கை அழைப்புக்கு ஒதுங்கிய முதியவரிடம் கத்தியை காட்டி மிரட்டி டூ வீலர் மற்றும் செல்போனை பறித்துச் சென்று இரு இளைஞர்கள் கைது.


கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா, தாளப்பட்டி அருகே உள்ள பள்ளம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் வயது 64.

இவர் ஏப்ரல் 13ஆம் தேதி இரவு 10 மணியளவில், கரூர் - திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள டெக்ஸ் பார்க் பகுதியில் செயல்படும் தனியார் பேக்கரி அருகே தனது டூவீலரை சிறுநீர் கழிப்பதற்காக நிறுத்தியுள்ளார்.

அப்போது அங்கு வந்த கரூர் பசுபதிபாளையம் பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வரும் 17 வயது மாணவன் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாமை சேர்ந்த இன்பரசன் வயது 20 ஆகிய இருவரும் சேர்ந்து சக்திவேலிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரது டூவீலர் மற்றும் அவரது 9 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் பறித்து சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சக்திவேல் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அப்பகுதியில் பொருத்தி உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 17 வயது பள்ளி மாணவனையும், 20 வயது இன்ப ரசனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் அரவக்குறிச்சி காவல்துறையினர். மேலும்,

பறித்துச் சென்ற டூவீலர் மற்றும் மொபைல் போனை போலீசார் மீட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி