வீட்டிற்குள் களவாட சென்ற வாலிபர் கையும் களவுமாக கைது.

76பார்த்தது
மூலிமங்கலம் அருகே வீட்டிற்குள் களவாட சென்ற வாலிபர் கையும் களவுமாக கைது.

கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, மூலிமங்கலம், நாட்டுக்கல், முதல் தெருவை சேர்ந்தவர் சாமியப்பன் வயது 62.

ஜூலை 8-ம் தேதி மாலை 5: 30- மணி அளவில், இவரது வீட்டிற்குள், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, ஸ்ரீராம் நகர் அருகே உள்ள சௌடாம்பிகை நகர் பகுதியை சேர்ந்த சரவணன் வயது 37 என்பவர் வீட்டிற்குள் புகுந்து களவாட முயன்றுள்ளார்.

அப்போது வீட்டிற்குள் இருந்த சாமியப்பன் திருடன், திருடன் என கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் ஒன்று சேர்ந்து களவாட வந்த சரவணன் கையும் களவுமாக பிடித்து வேலாயுதம்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், சரவணனை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

பிடிபட்ட சரவணன் மீது கோவை மாவட்டத்தில் ஆறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி