அரவக்குறிச்சியில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறையை மாணவியை கொண்டு திறந்து வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 43 லட்சம் மதிப்பில் புதிதாக கூடுதலாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பு அறைகளை திறக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி, மாணவி ஒருவரை அழைத்து பள்ளி கட்டிடத்தை திறக்க செய்தார்.
இதன் பிறகு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நங்காஞ்சி ஆற்றின் பாசன கால்வாய்க்கு இடம் கொடுத்த 65 விவசாயிகளுக்கு ரூபாய் 1. 81 கோடி இழப்பீட்டுத் தொகையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.