வேகமாக சென்ற பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்து. 7 பேர் படுகாயம்

72பார்த்தது
தடா கோவில் - வேகமாக சென்ற பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்து. 7- பேர் படுகாயம்.

அரவக்குறிச்சி -சேவியர் தெருவை சேர்ந்தவர் சேவியர் 31.

இவர் ஜூன் 8-ல் , இவரது வேனில் அரவக்குறிச்சி அருகே எல்லமேடு பகுதியைச் சேர்ந்த சுமதி 45, கண்ணகி 57, பூங்கொடி , ஈஸ்வரி, அங்கம்மாள், மாரியம்மாள், செல்வராணி ஆகியோரை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் - கரூர் சாலையில் அந்த வேன் தடா கோவில் பகுதியில் சென்றபோது, வேனை வேகமாக இயக்கியதால், எதிர்பாராத விதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த டிரைவர் தவிர அனைவருக்கும் காயம் ஏற்பட்டது.


அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி