சித்தி விநாயகர், பட்டாளம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா.

60பார்த்தது
வடகம்பாடியில் சித்தி விநாயகர், பட்டாளம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா,
ஆர். வெள்ளோடு அருகே உள்ள வடகம் பாடியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு சித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ பட்டாளம்மன் திருக்கோவில் புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா அதிகாலையில் மங்கல இசையுடன் துவங்கியது.

பின்னர் விநாயகர் பூஜை, கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை எடுத்துச் சென்று கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை சிவாச்சாரியார் வெகு சிறப்பாக நடத்தினார்.


இதனைத் தொடர்ந்து மூலவருக்கு மகா தீபாதாரணையும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள், குழந்தைகள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர்.


விழாவில் பங்கேற்ற அனைவருக்கும், கும்பாபிஷேக விழா கமிட்டியின் சார்பாக, அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி