மணல்மேடு- முதியவர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து.

76பார்த்தது
மணல்மேடு அருகே சாலையோரம் நின்ற முதியவர் மீது வேகமாக வந்த சரக்கு வாகனம் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.

கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுகா, தாளப்பட்டி அருகே உள்ள செய்யப்ப கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சமுத்து வயது 68.

இவர் ஜூன் 7-ம் தேதி மாலை 4: 45-மணி அளவில், அரவக்குறிச்சி சாலையில் உள்ள டெக்ஸ் பார்க்-ல் இருந்து செய்யப்பகவுண்டன் புதூர் செல்லும் சாலையில், மணல்மேடு பிரிவு அருகே நின்று கொண்டு இருந்தார்.

அப்போது, நீலகிரி மாவட்டம், குன்னூர், துத்தூர்மட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் வயது 37 என்பவர், வேகமாக ஓட்டி வந்த பொலிரோ பிக் அப் வேன், பிச்சமுத்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.


இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த பிச்சமுத்துவின் உறவினர் பழனியம்மாள் வயது 50 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சரக்கு வாகனத்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி