தளவாய் பாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் மூதாட்டி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே தளவாபாளையத்தில் செயல்பட்டு வரும்
தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 20 ஆண்டுகளாக, திருச்சி மாவட்டம்வேலாயுதம்பாளைே நடுத்தெருவை சேர்ந்த லட்சுமணன் ரெட்டி மனைவி எல்லம்மாள் வயது 79 என்பவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் செப்டம்பர் 29ம் தேதி மாலை 4: 30 மணி அளவில், வழக்கம் போல் தனது பணியை முடித்துவிட்டு, குளிப்பதற்காக கல்லூரியில் உள்ள மாணவர்கள் விடுதி அருகே சென்றுள்ளார்.
அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியில் மின்மோட்டார்காக இணைக்கப்பட்டு இருந்த வயரிலிருந்து மின்சாரம் கசிந்து பாய்ந்தது.
இதனை அறியாமல் மின் வேலியை தொட்டதால், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட எல்லம்மாள் மயக்கமுற்று கீழே விழுந்தார். அவரை மீட்டு, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் எல்லம்மாள் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
சம்பவம் அறிந்த எல்லம்மாளின் மகன் ராஜேந்திரன் வயது 49 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த எல்லம்மாளின் உடலை, உடற்கூறு ஆய்வுக்கு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை
சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்தனர் வேலாயுதம்பாளையம காவல்துறையினர்.