வெண்ணமலையில் வீடு வீடாக நடந்து சென்று அதிமுகவினர் புதிய உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டடனர்.
அதிமுக தலைமை அறிவிப்பின் படி, புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் தமிழக முழுவதும் முழு எழுச்சியோடு நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கரூர் மேற்கு ஒன்றியம், காதப்பாறை ஊராட்சி உட்பட்ட வெண்ணமலை, தரணி நகர், நேதாஜி நகர், காந்தி நகர், தங்க நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், அதிமுக கரூர் மாவட்ட செயலாளருமான எம். ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் வீடு வீடாக நடந்து சென்று அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தினை பூர்த்தி செய்தும், கழக நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கை படிவத்தினை எவ்வாறு பூர்த்தி செய்து வருகின்றனர் என்பதை இன்று ஆய்வு மேற்கொண்டார்.
இதேபோல கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவினர் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிகழ்ச்சியில், அதிமுக கரூர் மேற்கு ஒன்றிய செயலாளரும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளருமான கமலகண்ணன், ஒன்றிய கவுன்சிலர் தமிழ் செல்வம், காந்தி நகர் கிளை கழக செயலாளர் ரத்னகுமார், தையல் கூட்டுறவு யூனியன் தலைவர் ஜானகி மூர்த்தி, வெண்ணமலை அதிமுக கிளை செயலாளர் ஆறுமுகம், தரணி நகர் கிளை செயலாளர் தமிழ் செல்வம், நேதாஜி நகர் கிளை செயலாளர் தமிழ்மணி, தங்கநகர் கிளை செயலாளர் தண்டபாணி, வெண்ணமலை கிளை செயலாளர் கார்த்தி, உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.