ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள். ரயில் சேவையில் மாற்றம்.

74பார்த்தது
வீரராக்கியம் ரயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம் என சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் அறிவிப்பு.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்.

  பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி சந்திப்பு எக்ஸ்பிரஸ், பாலக்காடு டவுனில் இருந்து காலை 06. 30 மணிக்கு புறப்படும் ரயில் 07. 02. 25 அன்று கரூரில் சிறிது நேர நிறுத்தப்படும். வீரராகியத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்ததும், கரூரில் இருந்து திருச்சிராப்பள்ளி சந்திப்புக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

இதே போல மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ், காலை 06. 00 மணிக்கு புறப்படும். 07. 02. 25 அன்று வீரராக்கியத்தில் நிறுத்தப்படும்.

  ரயில் புறப்படும் நிலையம் மாற்றம் குறித்து அறிவிப்பு


இதே போல சேலம் சந்திப்பிலிருந்து புறப்படும் ரயில் எண். 16812 சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், 07. 02. 25 அன்று மதியம் 3. 40 மணிக்கு கரூர் சந்திப்பிலிருந்து புறப்படும் என சேலம் கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி