மேகரையில் அருள்மிகு விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா

55பார்த்தது
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, புஞ்சைக் காளக்குறிச்சி ஊராட்சியில் உள்ள மேகரையில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு விநாயகர், நவநீதகிரி, வேலாயுதசுவாமி, மாரியம்மன், கருப்பண்ணசாமி ஆகிய பரிவார தெய்வங்கள் அமர்ந்து அருள் பாலிக்கும் ஆலயம் புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 

கும்பாபிஷேக விழா அதிகாலையில் மங்கள இசை உடன் துவங்கி பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பிறகு யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கோபுரத்துக்கு எடுத்துச் சென்று கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை சிவாச்சாரியார்கள் நடத்தினர். இதனைத் தொடர்ந்து மூலவருக்கு மகா தீபாராதனை நடைபெற்று அனைவரும் சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி