கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ராஜபுரம் அருகே உள்ள பாரதியார் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் வயது 38. இவரது மனைவி பிரியா வயது 35. கோவிந்தராஜ் அண்மைக் காலமாக அதிக கடன் பெற்று திருப்பிச் செலுத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லையே என்ற அதிர்ச்சியில் ஏப்ரல் 14ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் கரடிப்பட்டி, அண்ணா நகர் பகுதியில் உள்ள குப்புசாமி கோவில் அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவம் அறிந்த அவரது மனைவி பிரியா, சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த கோவிந்தராஜனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.