கரூர்: மாடு மாலைத் தாண்டும் திருவிழா

53பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சிவாயம் ஊராட்சிக்கு உட்பட்ட, குறிக்காரன் பட்டியில் உள்ள நடு பள்ளம் தாதல்மாதாநாயக்கர் மந்தை, ஜக்கம்மாள், பல்லகுறும்பன், வீரிய காரன் ஆகிய சுவாமிகளின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டும் விழா நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, முதல் நாள் திருவிழாவில் வீரியக்கார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அதைத் தொடர்ந்து இரண்டாம் நாள் திருவிழாவில் ஜக்கம்மாளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மூன்றாவது நாள் திருவிழாவில் எருது மாடு தாண்டுதல் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, பல்வேறு பகுதியில் இருந்து வாகனங்களில் அழைத்து வரப்பட்ட சுவாமி எருது மாடுகள் மற்றும் உரிமையாளர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அடுத்து, மாலை எருது மாடுகள் மாலை தாண்டும் விழா நடைபெற்றது.

விழாவில் பல்வேறு ஊர்களில் அழைத்துவரப்பட்ட நூற்றுக்கணக்கான எருது மாடுகள் எல்கையில் இருந்து இலக்கை நோக்கி விரட்டி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரம்பு கம்புகளை ஏந்தியவாறு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விருது மாடுகளை விரட்டி வந்தனர்.

இந்த விழாவில் கருமாதம்பட்டியை சேர்ந்த முப்பணக்காட்சி மந்தை மாடு முதலாவதாகவும், இரகாமநாயக்கர் மந்தை மாடு இரண்டாவதாகவும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாடுகளுக்கு பாரம்பரிய வழக்கப்படி சந்தனம் எலுமிச்சை பழம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி