விபத்தில் சிக்கிய காரில் ரூ 1, 79, 000 போதை பொருட்கள் கடத்தல்.

84பார்த்தது
நாணப்பரப்பு - விபத்தில் சிக்கிய காரில் ரூ 1, 79, 000 மதிப்பில் போதை பொருட்கள் கடத்தல்.

சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாணப் பரப்பு பகுதியில் நேற்று அதிகாலையில் ஒரு கார் விபத்தில் சிக்கியது.


காரை ஓட்டி வந்தவர்கள் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர்.

விபத்து குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,

விபத்தில் சிக்கிய காரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1297 பண்டல்களில் 292 கிலோ கிராம் எடையுள்ள கணேஷ் புகையிலை மற்றும் 11 கிலோ 300 கிராம் எடை கொண்ட 112 பண்டல்களில் கூல் லிப் உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருப்பதை கண்டு பறிமுதல் செய்தனர்.

மேலும் காரின் பதிவெண்னை வைத்து குற்ற செயலில் சம்பந்தப்பட்ட நபர்கள் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி