கார்வழி- சடச்சியம்மன் கோவில் உண்டியலை களவாடி சென்ற நபர்கள்.

70பார்த்தது
கார்வழி- சடச்சியம்மன் கோவில் உண்டியலை களவாடி சென்ற அடையாளம் தெரியாத நபர்கள்.

கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, கார்வழி, சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி வயது 44.

ஜூன் ஐந்தாம் தேதி இரவு 10 மணி அளவில் செல்வமணியும் அவரது நண்பர் குப்புசாமி ஆகிய இருவரும் டூவீலரில் வெளியூருக்கு சென்று விட்டு கார்வழிக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள சடச்சி அம்மன் கோவில் அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கார்வழி சடச்சி அம்மன் கோவிலில் இருந்த ரூபாய் மூன்றாயிரம் மதிப்புள்ள, உண்டியலை களவாடி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக செல்வமணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உண்டியலை களவாடி சென்ற அந்த அடையாளம் தெரியாத நபர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தென்னிலை காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி