புகலூர் வாங்கல் பெரிய வாய்க்காலை தூர்வார கோரிக்கை

1724பார்த்தது
வாங்கல் பெரிய வாய்க்கால் புகலூர் பகுதியில் இருந்து பிரிந்து கடம்பன்குறிச்சி என் புதூர் வாங்கல் வரை விவசாயிகள் பாசன வசதி பெற்று வரும் முக்கிய வாய்க்காலாக உள்ளது.

வாய்க்காலில் நீர் பாசன வசதி தடையின்றி விவசாயிகள் பெறுவதற்கு வாய்க்கால் முறையாக தூர்வாரி தண்ணீர் திறந்த விட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பொதுப்பணித்துறை நீர்வளத்துறை அதிகாரிகள் தற்பொழுது தண்ணீர் வரத்து இல்லாததால் தூர்வாரும் பணிகளை முழுமையாக செய்து தர வேண்டும் என்பதை அப்பகுதி விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

வாங்கல் வட்டாரத்தில் கரும்பு, கோரை, வாழை உள்ளிட்ட முக்கிய பயிர்களை விவசாயிகள் வாய்க்கால் நீர் பாசனத்தை நம்பியே பயிரிட்டு வருகின்றனர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதைப் போல தூர்வாரும் பணிகள் இந்த ஆண்டும் குறைவாக நடத்த வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி