வேட்டமங்கலம் நிலத்தகராறில் தம்பியை தாக்கி கத்தியை காட்டி மிரட்டிய அண்ணன் கைது.
கரூர் மாவட்டம் , புகலூர் தாலுகா , வேட்டமங்கலம் , பழைய காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமு வயது 65.
இவரது உடன் பிறந்த சகோதரர் ராமன் வயது 75.
இவர்களது குடும்ப சொத்தான ஒரு ஏக்கர் நிலம் தொடர்பாக இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் ஜூன் 3-ம் தேதி மாலை 4 மணி அளவில் , ராமன் மது போதையில் ராமு வீட்டிற்கு வந்து தகாத வார்த்தை பேசி கத்தியால் தாக்கியுள்ளார்.
மேலும் ராமுவின் மனைவி பாப்பாத்தியையும் கத்தியை காட்டி மிரட்டி துன்புறுத்தி உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாப்பாத்தி அளித்த புகாரின் பேரில் , சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை கொண்ட காவல் துறையினர் , இது தொடர்பாக ராமனை கைது செய்து வரும் 15ஆம் தேதி வரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.