அரவக்குறிச்சியில் விளைச்சல் பாதிப்பால் முருங்கை விவசாயிகள் கவலை.
அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் முருங்கை விவசாயம் பிரதானமாக செய்யப்பட்டு வருகிறது. அரவக்குறிச்சி, சின்னதாராபுரம்,
க. பரமத்தி, தென்னிலை பகுதிகளில் சுமார் 30, 000 ஏக்கரில் முருங்கை சாகுபடி நடைபெற்று வருகிறது.
வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே விளைச்சதை கொடுக்கும் முருங்கை ஒரு ஏக்கருக்கு ஒன்னரை டன் வரை உற்பத்தியாகும்.
ஒரு மரத்திற்கு 300- முதல் 400 முருங்கைக்காய் கிடைக்கும். இங்கு உற்பத்தியாகும் முருங்கைக்காய்கள் ருசியாகவும் சதைப்பிடிப்பு அதிகமாகவும் இருக்கும் இதன் காரணமாக தமிழகம் கேரளா ஆந்திரா கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது
தற்போது அமராவதி, குடகனாறு ஆறுகள் வறண்டு விட்டதாலும், நிலத்தடி நீர் கீழே சென்று விட்டதாலும், கோடையின் தாக்கம் அதிகரித்து விட்டதாலும் விளைச்சல் வெகுவாக குறைந்து விட்டது.
வழக்கமாக நாளொன்றுக்கு 300 டன் முருங்கை காய்கள் சந்தைக்கு வரும். ஆனால் நடப்பாண்டில் இது 150 டன் ஆக குறைந்துள்ளது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.