கரூர் சின்னதாராபுரம் அருகே நடந்து சென்ற முதியவர் கார் மோதி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் கரூர் தாராபுரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சின்னதாராபுரம் பகுதியில் நேரு நகர் முத்துசாமி மகன் முனியப்பன் வயது 70 என்ற பைப் கம்பெனி தொழிலாளி சின்னதாராபுரம் சாலையில் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது அவ்வழியாக வந்த கார் ஒன்று, முனியப்பன் மீது மோதியதில் சம்பவ இடத்தில் பரிதாபமாக தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சின்னதாராபுரம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை கைது செய்து, சின்னதாராபுரம் போலீசார் அக்டோபர் 9ம் தேதி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.