க. பரமத்தி கணவனைப் பிரிந்து வாழ்ந்த இளம் பெண் மற்றொருவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் தற்கொலை.
நீலகிரி மாவட்டம், பந்தலூர், சேரவோடு பகுதியைச் சேர்ந்த சசிகரன் மகள் கிருத்திகா வயது 22.
இவருக்கு 4- ஆண்டுகளுக்கு முன் நாகராஜன் என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்த கிருத்திகா கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இதனிடையே நெய்வேலியை சேர்ந்த சிவா என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் கிருத்திகாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்த தகவல் அறிந்த கிருத்திகாவின் சகோதரர் தேவேந்திரன் கிருத்திகாவை சில நாட்களுக்கு முன்பு கரூர் மாவட்டம்
க. பரமத்தி அருகே உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த கிருத்திகா நேற்று முன் தினம் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.