விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம்பறித்த இளைஞன் கைது.

72பார்த்தது
ஆண்டிபட்டி கோட்டையில் அதிகாலையில் விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞன் கைது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ஆலமரத்துப்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாபு வயது 47. இவர்
அப்பகுதியில் விவசாயியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில், ஆண்டிபட்டிகோட்டை, கோட்டைநகர் பகுதியில் உள்ள கனகராஜ் என்பவர் வீட்டின் அருகே பாபு நடந்து சென்று கொண்டிருந்தபோது,

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மறைந்த பெரியசாமி மகன் ஜோசப் ராஜ் என்கிற மணிகண்டன் வயது 25 என்பவர், பாபுவின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூபாய் ஆயிரத்தை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார்.

அப்போது பாபு கூச்சலிட்டதால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டனை கையும் களவுமாக பிடித்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் பிடிபட்ட மணிகண்டனை கைது செய்தனர்.

பின்னர் மணிகண்டனை விசாரணை மேற்கொண்ட போது, ஏற்கனவே மணிகண்டன் மீது மதுரை மாவட்டத்தில் மூன்று குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.

எனவே, மணிகண்டன் மீது பாபு அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி