கரூர்: வீடு தீப்பற்றி மூச்சு திணறல் ஏற்பட்டு வாலிபர் உயிரிழப்பு

83பார்த்தது
வேலாயுதம்பாளையத்தில் உறங்கும் போது வீடு தீப்பற்றியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு வாலிபர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, மேலொரத்தை பகுதியைச் சேர்ந்தவர் நல்லுசாமி மகன் மலையப்பசாமி வயது 44. இவர் புகலூர் டிஎன்பிஎல் ஆலையில் சிவில் காண்ட்ராக்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் மார்ச் 29ஆம் தேதி காலை 6 மணி அளவில், வேலாயுதம்பாளையம் கருப்பண்ண கவுண்டர் தெருவில் உள்ள அவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் வீட்டில் பொருத்தி இருந்த வாட்டர் ஹீட்டரில் மின்சார கசிவு ஏற்பட்டு, திடீரென தீப்பற்றியது. இதில் வீடு முழுவதும் புகை பரவியது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மலையப்பசாமி இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டார். 

இந்த சம்பவம் அறிந்த மலையப்பசாமியின் தந்தை நல்லுசாமி தனது மகனை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் அதிர்ச்சி அடைந்த நல்லுசாமி, இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த மலையப்பசாமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி