மது போதைக்கு அடிமையான வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.

74பார்த்தது
அரங்கபாளையத்தில் மது போதைக்கு அடிமையான வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே நெடுங்காடு வயல், பள்ளப்பட்டி பிரிவு பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு வயது 48.

இவர் மது போதைக்கு அடிமையானார். இதனால், கடந்த இரண்டு வருடங்களாக உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்தார்.


ஆயினும் அவருக்கு உடல் நலம் சீராகவில்லை.

இந்நிலையில், டிசம்பர் 22ஆம் தேதி காலை 10 மணி அளவில் அரங்கபாளையத்தில் உள்ள அணைப்புதூர் சாலையில் நடந்து செல்லும் போது, திடீரென மயங்கி கீழே விழுந்தார்.


உடனடியாக அவரை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.


இந்த சம்பவம் அறிந்த திருநாவுக்கரசின் சகோதரர் அறிவுக்கரசு வயது 45 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த திருநாவுக்கரசு உடலை, அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சின்னதாராபுரம் காவல் துறையினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி