கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 67வது இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நடத்தும் மாநில அளவிலான கோகோ போட்டி 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றது இப்ப போட்டியில் 8 மண்டல அளவில் சென்னை, வேலூர் , சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மட்டும் 72 மாணவர்கள் கலந்து கொண்டனர் இதில் 12 மாணவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க உள்ளனர். இப்போ போட்டியினை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் ஈவேரா அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வாசுகி மற்றும் உடல் கல்வி ஆசிரியர்கள் முன்னிலையில் போட்டியில் நடைபெற்றது இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு.
மாவட்ட உடற்கல்வித்துறை ஆய்வாளர் மாணவர்களிடம் உரையாற்று கையில்:
விளையாட்டுவீரர்களுக்கு விட்டுக் கொடுக்கும் தன்மை வேண்டும், எதுவும் கிடைக்கவில்லை என்று வருத்தப்படக்கூடாது இது கிடைக்கவில்லை என்றால் அதனுடன்மேலும் சிறப்பாக ஒன்று கிடைக்கும் என்றும் பல்வேறு அறிவுரைகளை விளையாட்டு வீரர்களுக்கு வழங்கினார்.