தவிட்டுப்பாளையம் மயானம் அருகே பணம்வைத்து சூதாடிய 3பேர் கைது.

77பார்த்தது
தவிட்டுப்பாளையம் மயானம் அருகே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூபாய் 200 பறிமுதல்.


கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, தவிட்டுப்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் கருணாநிதிக்கு தகவல் கிடைத்தது.


தகவலின் அடிப்படையில், ஜூன் 7-ம் தேதி காலை 11 மணியளவில், தவிட்டுப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, அருகில் உள்ள மயானம் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட தவிட்டுப்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்த கதிரவன், அருகிலுள்ள துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ்குமார், மனோஜ் பிரபாகரன் ஆகிய 3- பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ. 200-ஐ பறிமுதல் செய்தனர்.


மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த வேலாயுதம்பாளையம் காவல்துறையினர், அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி