மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி எழுதிய நூல்களை நாட்டுடைமை செய்து அதற்கான அரசாணையை அவரது துணைவி ராஜாத்தி அம்மாளிடம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். கருணாநிதியின் நூல்கள் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை ஆக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், நாட்டுடைமை ஆக்கப்பட்டதற்கான அரசாணையை இன்று (டிச., 22) சென்னை சிஐடி காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாளின் இல்லத்திற்கு சென்று அமைச்சர் வழங்கினார். அப்போது கனிமொழி எம்.பி., உடனிருந்தார்.