RCB வெற்றிப் பேரணி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு தவறான ஆலோசனையை வழங்கியதாக குற்றச்சாட்டுகள் குவிந்தன. அதன் காரணமாக, சித்தராமையாவின் அரசியல் செயலாளராக இருந்த கெம்பா கோவிந்தராஜ் அதிரடியாக அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (ஜூன் 5) பெங்களூரு நகர காவல் ஆணையர் பி. தயானந்தை இடைநீக்கம் செய்ய முதலமைச்சர் முடிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.