ரீ-ரிலீஸாகும் ‘கரகாட்டக்காரன்'

53பார்த்தது
ரீ-ரிலீஸாகும் ‘கரகாட்டக்காரன்'
ராமராஜனின் சிறந்த படமான 'கரகாட்டக்காரன்'-ஐ ரீ ரிலீஸ் செய்யப் போவதாக ராமராஜன் தெரிவித்துள்ளார். வரும் ஜூன் 16-ம் தேதியோடு இப்படம் வெளியாகி 36 ஆண்டு ஆகிறது. இதையொட்டி, படத்தின் ரி-ரிலீஸ் தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என கூறியுள்ளார். ₹35 லட்சம் பட்ஜெட்டில் தயாராகி, 450 நாள்களுக்கு மேல் ஓடி, ₹5 கோடி வசூலித்து இப்படம் சாதனை படைத்தது. இப்படத்தின் பாடல்களும், கவுண்டமணி-செந்தில் கோவை சரளா காமெடியும் இன்றளவும் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி