ஐஸ்வர்யா
ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் ரஜினி காந்த். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் சமீபத்தில் மும்பை சென்றிருந்தார். தற்போது ரஜினியுடன் இந்திய
கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்திய
கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில் தேவ் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்று சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.