செங்கல்: சிவபார்வதி கோயிலில் வித்தியாரம்ப நிகழ்ச்சி
தமிழக கேரளா எல்லைப் பகுதியான உதியன்குளம்கரை அருகே செங்கல் ஊராட்சிக்குட்பட்ட மகேஸ்வரத்தில் சிவபார்வதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் உலகிலேயே உயரமான 112. 2 அடி உயரமுடைய சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே வைகுண்டம் அமைத்து அதன் மேல் ஆஞ்சநேயர் காற்றில் பறந்து செல்வது போன்று அழகாக நிறுவப்பட்டுள்ளது. தற்போது தேவலோகம் அமைக்கும் திருப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் திறப்பு விழா துவங்கும் நிலையில் உள்ளது. மேலும் இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா நடப்பது வழக்கம். இவ்வாண்டு நவராத்திரி கொலு மண்டபத்தில் விழா துவங்கியது. தினமும் பூஜைகள், தீபாராதனை நடந்தது. விஜயதசமி தினமான இன்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி குழந்தைகளுக்கு முதல் எழுத்தை எழுதி வித்தியாரம்ப நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு கலைகளின் அரங்கேற்றம் நடந்தது.