அருமனை: அதிகாரிகள் பாராமுகத்தால் சிறுவர்கள் சரி செய்த சாலை
ஆறுகாணியை அடுத்த ஒரு நூறாம்வயல் பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு செல்ல வேண்டிய முக்கியமான சாலையில் தினமும் ஓரிருமுறை மட்டுமே பஸ் உள்ளது. இந்த சாலை பழுதடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் தாழ்வான படிக்கட்டுகளை கொண்ட அரசு பஸ் செல்லும் போது பள்ளத்தில் மோதி சேதம் அடைகின்றன. எனவே சாலை பள்ளத்தை சீரமைக்கக் கோரி கடையால் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனால் அணைமுகம் உள்ளிட்ட வழித்தடத்தில் தடம் எண் -341 பஸ்சை இப்போது இந்த வழியாக இயக்க ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தயக்கம் காட்டுகின்றனர். அதனால் பொறுமை இழந்த அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் நேற்று(அக்.13) விடுமுறை தினத்தில் தங்களால் முடிந்த கற்கள், மண் உள்ளிட்டவற்றை பல இடங்களில் இருந்து சேகரித்துக் கொண்டு வந்து பள்ளத்தில் கொட்டி சரி செய்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.