குமரி: டிரைவர் திடீர் உயிரிழப்பு; பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் பழைய காயல், கோவங்காடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (24). இவர் பார்வதிபுரம் பகுதியில் உள்ள ஒரு பாமாயில் கம்பெனியில் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார். சம்பவ தினம் மதியம் கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட சின்னத்துறை பகுதியில் உள்ள ஒரு கடையில் பாமாயில் இறக்கிக் கொண்டிருந்த போது, தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனே சக ஊழியர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது எனவும், எனவே மாற்று மருத்துவமனை கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அப்போது அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாலமுருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்கள். இது குறித்து சக ஊழியர்கள் பாலமுருகன் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாலமுருகனின் தந்தை நித்திரவிளை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.