நித்திரவிளை அருகே கொல்லால் செண்பகத் தறை பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவரது 17 வயது மகன் பாறசாலை பகுதியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வருகிறார். இவருக்கும் காஞ்சாபுரம் பகுதியை சேர்ந்த பிஜு (25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று (செப்.,21) மதியம் ராஜு தனது நண்பருடன் பைக்கில் காஞ்சாம்புரம் பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் மற்றொரு பைக்கில் வந்த பிஜு , ராஜுசென்ற பைக்கின் பின்பக்கம் மோதி தள்ளி உள்ளார்.
இதில் கீழே விழுந்த ராஜுவை கல்லால் முகத்தில் தாக்கியுள்ளார். தாக்குதலில் ராஜுவின் மூன்று பற்கள் உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் வழக்கு செய்து பிஜுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.