மார்த்தாண்டம் அருகே பணம் திருடிய வாலிபர் கைது

1085பார்த்தது
மார்த்தாண்டம் அருகே பணம் திருடிய வாலிபர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் மருதூர் குறிச்சி நெல்லிக்காய் விளையை சேர்ந்தவர் எட்வின்(35) , இவர் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மார்தாண்டம் பம்மம் பகுதியில் பணியில் இருந்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது ரூ. 500-ஐ நட்டாலம் பருத்தி விளை பகுதியைச் சேர்ந்த ராஜா சிங்( 41) என்பவர் நைசாக திருடி சென்றுள்ளார். இதைப் பார்த்த அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த பணியாளர்கள் ராஜா சிங்-கை துரத்தி சென்று பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி