கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் மரத்தை பாதுகாத்தல் என்ற தலைப்பில் மரம் வளர்ப்பு, மரம் பாதுகாதல் விழிப்புணர்வு பேரணி ஆகியவை நேற்று நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் அருட்தந்தை அருள்தாஸ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பீட்டர் அமலாதாஸ் வாழ்த்துரை வழங்கினார், சிறப்பு விருந்தினராக பத்மநாபபுரம் கோட்டாட்சியர் தமிழரசி கலந்துகொண்டு மரம் நடுதல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார், மரம் வளர்த்தல் குறித்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகரன் தொகுப்புரையாற்றினார், இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி என்சிசி அமைப்பினர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் பேராசிரியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.