திருவட்டார்: மீன் வியாபாரிக்கு கத்திக்குத்து;  உறவினர் கைது

77பார்த்தது
திருவட்டார்: மீன் வியாபாரிக்கு கத்திக்குத்து;  உறவினர் கைது
திருவட்டார் அருகே புத்தன் கடை பகுதியை சேர்ந்தவர் ரதீஷ் (40). இவர் சந்தையில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (42) இவரும் அதே சந்தையில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இரண்டு பேரும் உறவினர்கள். 

மீன் விற்பனை செய்வது தொடர்பாக அடிக்கடி இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று தகராறு ஏற்பட்டு, மீன் வெட்ட பயன்படுத்தும் கத்தியால் ராஜ்குமார் சரமாரியாக ரதீஷை நெஞ்சில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த ரதீஷ் திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் திருவட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜகுமாரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி