தேங்காப்பட்டணம்: கடற்கரையில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு

75பார்த்தது
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் மேக்னஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் கிறிஸ்மஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று 21ஆம் தேதி (சனிக்கிழமை) தேங்காப்பட்டணம் கடற்கரை பகுதியி உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.  

      நிகழ்ச்சிக்கு கல்லூரியின் மேலாளர் அரவிந்த் வரவேற்றார். கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார்  விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். அவர் கூறுகையில்: -  குமரி மாவட்டத்தை பொருத்தவரையில் கடற்கரை மற்றும் அனைத்து பகுதிகளிலும் தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் ஏராளமாக குவிந்து வருகின்றன. இப்படி இந்த கழிவுகள் குவியாமல் தவிர்க்க இளைய சமுதாயத்தால் தான் முடியும் என்று கூறினார்.

      இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து மாணவ மாணவிகள் கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்தனர். நிர்வாக தலைமை அலுவலர் மிதுன்  நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான். தேங்காப் பட்டனம் முன்னாள் ஜமாத் நிர்வாகி சௌகத் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி