புதுக்கடை அருகே உள்ள தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் சுதாகரன் மனைவி சிவகனி (37). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயின் (44) அவரது மனைவி சுபி (39) ஆகியோருக்கும் இடையே தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ தினம் சிவகனியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஜெயின், சுபி ஆகியோர் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் இதை தடுக்க வந்த சிவகனியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சிவகனி சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சிவகனி கொடுத்த புகாரின் பேரில் ஜெயின் அவரது மனைவி சுபி ஆகியோர் மீது புதுக்கடை போலீசார் நேற்று (23-ம் தேதி) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.