நகைக்கடையில் திருட்டு - பணியாளர்கள் மூன்று பேர் கைது

7198பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் பம்மம் பகுதியில் பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. அந்த நகைக்கடையில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அந்த நகைக்கடையில் பணிபுரிந்த பணியாளர்கள் சிலர் நிர்வாகத்திற்கு தெரியாமல் நகைகளை கொஞ்சம், கொஞ்சமாக திருடி சென்றது தெரிய வந்தது,

இதையடுத்து நகைகள் குறித்த கணக்கு ஆய்வு மேற்கொண்ட போது. நகைகள் மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்து கடை உரிமையாளர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு 12 -ஆண்டு காலமாக பணிபுரிந்து வந்த சிதறால் பகுதியைச் சேர்ந்த அனீஷ்(29) என்பவர் திருடியது தெரிய வந்தது. மேலும் அவருக்கு உதவியாக அந்த நகை கடையில் பணிபுரிந்த இரண்டு பெண் பணியாளான ஆமாம் சானல் கரை பகுதியை சேர்ந்த ஷாஜினி(28 ), மணலி விளை செம்பக்காட்டு விளையை சேர்ந்த அபிஷா (25) ஆகிய இருவரும் அனீஷ்-க்கு திருட உறுதுணையாக இருந்ததும் தெரிய வந்தது ,

இதையடுத்து அனீஷ், பெண் பணியாளர்களான ஷாஜினி , அபிஷா ஆகியோரையும் கைது செய்து விசாரணை நடத்தினார். பின்னர் அவர்களிடமிருந்து 54 பவுன் தங்க நகை, ஆறு கிலோ வெள்ளி நகை ஆகியவற்றையும் பறிமுதல் செய்த போலீசார் , மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி