குழித்துறையில் மகளிர் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடங்கள் உள்ளன. இதனால் எப்போதும் அப்பகுதியில் கூட்ட நெரிசல் மிகுதியாக காணப்படும். அங்கு தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் ரோமியோக்கள் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடுவதாக மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரின் உத்தரவின் பேரில் களியக்காவிளை போலீசார் நேற்று (ஜனவரி 9) மாலையில் விரைந்து சென்று அங்கு சாகசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நான்கு பேரை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் என தெரிய வந்தது. இதை அடுத்து அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.