திருவட்டாரில் ஆதி கேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஓண பண்டிகை நாளில் சாமிக்கு ஓணவில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இது மன்னராட்சி காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ள வழக்கமாகும். திருவோண பண்டிகை நாளில் மாலையில் ஆதிகேச பெருமாள் மற்றும் கிருஷ்ணன் உருவம் செதுக்கப்பட்டு வண்ணம் பூசப்பட்ட ஓண வில்களை பட்டு துணியில் மூடி கோவிலின் தென்மேற்கு மூலையில் வைப்பது இந்த நிகழ்ச்சியாகும்.
ஆதிகேச பெருமாள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீபதி பூஜை நடைபெறும் போது அந்த வில்கள் சாமிக்கு சமர்ப்பிக்கப்படும். இந்த பாரம்பரிய நிகழ்ச்சி நேற்று மாலை (செப் 15) நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.