கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சிராயன்குழி பிலாங்காலை விளையை சேர்ந்தவர் வேல்முருகன் (45) , மர
வேலை செய்து வருகிறார். இவரது சித்தப்பா ஆறுமுகம் (71 ) என்பவர் கடந்த 34- ஆண்டுகளாக, வேல்முருகன் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம் நேற்று அருகாமையில் உள்ள குளத்தில் குளிக்க சென்றவர் , வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை, இதை அடுத்து குளத்தில் சென்று பார்த்தபோது அவர் குளத்தில் மூழ்கி இறந்து இருப்பது தெரிய வந்தது, இதை அடுத்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,