கன்னியாகுமரி மாவட்டம்
விளவங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பாலவிளையில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடத்தை விளவங்கோடு ஊராட்சி தலைவர் லைலா ரவிசங்கர் அவர்கள் திறந்து வைத்தார்கள் . ஒன்றிய கவுன்சிலர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அலுவலர், அங்கன்வாடி பணியாளர்கள் ஊராட்சி உறுப்பினர்கள் எட்வின் ராஜ், சுனில், விஜயகுமாரி, மரியநேசம், கிறிஸ்டி பிரேம லதா, ஷீலா மற்றும் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.