நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன் மகன் ஆனந்தராஜன். இவர் மனைவி நேசிகா உட்பட ஐந்து பேர் சேர்ந்து முந்திரி ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் மேலாளராக விரிகோடு பகுதியை சேர்ந்த அனீஸ் உள்ளார். இவர்கள் வெளிநாடுகள் மற்றும் தமிழகம் மற்றும் கேரளா பகுதிக்கு ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஹன்சிகா மார்க் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை தொடங்கினர். முதலில் அப்பகுதியில் உள்ள மக்களை ஏமாற்றி பணம் வாங்கி அதற்கு பத்து சதவீதம் வட்டி தருகிறேன் என கூறி பணத்தை வாங்கியுள்ளனர். 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் பணத்தை கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் ஒரு அளவுக்கு மேல் வட்டி கொடுக்க முடியாமல் ஹன்சிகா மார்க் நிறுவனர்கள் தலைமறைவாகியுள்ளனர். பணத்தை இழந்த மக்களின் புகாரின் பேரில் மாவட்ட எஸ்பி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் 30 கோடி ரூபாய் மோசடி செய்தது அம்பலமானது.
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று (ஆக.,28 ) அரனீஸ் ராஜன், சுந்தரராஜன் மற்றும் கடை மேலாளர் அனி ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் வழக்கில் தொடர்புடைய ஆனந்தராஜன், அரவிந்தராஜன், நேசியா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.