களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 2025 - 2026 கல்வியாண்டிற்கான மாணவர் பேரவைத் தேர்தல் இன்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராஜ் தலைமை வகித்தார். தேர்தல் ஆணையர்களாக ஆசிரியர்கள் அனு சிஜிபாபு, ஸ்பென்சிலி, ரமேஷ்பாபு, ஸ்ரீதேவி ஆகியோர் செயல்பட்டனர். மேலாண்மைக் குழு தலைவர் சுகிதா, மேலாண்மைக் குழு உறுப்பினர் ஜான்போஸ்கோ, பிரியா ஆகியோர் வாக்குப் பதிவை மேற்கொண்டனர். மாணவர் தலைவராக மாணவர் நிகில், துணைத் தலைவராக அலீனா தாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.