மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் செல்லும் சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கிறது. மேலும் தினமும் தினசரி இரவு நூற்றுக்கணக்கான கனரக லாரிகள் இந்த ரோட்டில் செல்கிறது. இதனால் இந்த சாலைகள் பல பகுதிகளில் சேதமடைந்து 2 அடி ஆழத்திற்கு மேல் பல்லாங்குழியாக. காணப்படுவதால் மிகப்பெரிய விபத்துக்கள் நடைபெற்று வருகிறது.
இந்த சாலை முழுமையாக சீரமைக்க கேட்டு அரசியல் கட்சிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சல்லி, தார் போட்டு தற்காலிக சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் பணிகள் நிறைவு பெறும் முன்பு கடும் மழை பெய்ததால் சல்லி அனைத்தும் அடித்து செல்லப்பட்டது.
இந்த நிலையில் மார்த்தாண்டம் பம்மம் பகுதியில் விரைவு போக்குவரத்து கழக டெப்போ எதிர்புறம் ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குடிநீர் குழாயும் உடைந்துள்ளது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று (22-ம் தேதி) சாலையில் வாழைநடும் போராட்டம் நடந்தது. குழித்துறை நகராட்சி கவுன்சிலர் சர்தார் ஷா தலைமையில் கட்சியினர் பலர் வாழை நடும் போராட்டம் நடத்தினர்.