மார்த்தாண்டம்: மழை சேத பகுதிகளில் மின்சார அமைச்சர் ஆய்வு

56பார்த்தது
குமரி மாவட்டத்தில் கடந்த 9 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழையில் ஏராளமான மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. மேலும் மேற்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.

இந்த நிலையில் நேற்று (மே 31) தமிழக மின்சார துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட குமரி மாவட்டம் வந்தார். பின்னர் குழித்துறை நகரமன்ற அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் அவர் பேட்டி அளித்தார். பேட்டியில் கூறியதாவது: - குமரியில் மொத்தம் 563 மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் 443 மின்கம்பங்கள் மீண்டும் நிறுவப்பட்டு மின் வினியோகமும் பெறப்பட்டுள்ளது.

ஒரு சில பகுதிகளில் விநியோகம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இவை இன்று முதல் தேதி மாலைக்குள் பணிகள் முடிக்கப்பட்டு மின்சாரம் விநியோகிக்கப்படும். பணியாளர்கள் பற்றாக்குறை என்பது கடந்த காலங்களில் இருந்தது. தற்போது ஒவ்வொரு துறைகளிலும் படிப்படியாக ஆட்கள் வேலைக்கு எடுக்கப்பட்டு வருகின்றனர்.

பணியாளர்கள் நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது என கூறினார். இந்த பேட்டியின் போது தாரகை கத்பட் எம்எல்ஏ, குழித்துறை நகரமன்ற தலைவர் பொன் ஆசைத்தம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி