மார்த்தாண்டத்தில் முஸ்லீம் பள்ளிவாசல் ஒன்று உள்ளது. கடந்த 9-ம் தேதி இந்த பள்ளிவாசலில் தேர்தல் நடந்துள்ளது. தேர்தலில் அரசு ஊழியர்களாக பணியாற்றும் இரண்டு பேர் போட்டியிட்டனர். ஆனால் அரசு பணியில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என கீழப்பம்மம் பகுதியைச் சேர்ந்த ஷேக் முகமது (52) என்பவர் உட்பட ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் கொடுங்குளம் பகுதியைச் சேர்ந்த வக்கீல் சர்தார் ஷா என்பவர் உட்பட மற்றொரு தரப்பினர் ஆதரவுத் தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் பள்ளிவாசலில் வழக்கம்போல் தொழுகை நடைபெற்றது. அப்போது வக்கீல் சர்தார் ஷா (50) நோன்புக் கஞ்சி தயாரிப்பதற்கான அரிசியை வழங்கிக்கொண்டிருந்தார். அந்தநேரம் அங்கு வந்த ஷேக் முகமது உட்பட 12 பேர் சேர்ந்து கம்பியால் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதுபோலவே சர்தார் ஷா உட்பட 6 பேர் ஷேக் முகமதுவைத் தாக்கினார்களாம். இதுகுறித்து மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் மாறிமாறிப் புகார் அளித்தனர். புகாரின்பேரில் இருதரப்பைச் சேர்ந்த 18 பேர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.