மார்த்தாண்டம்: எண்ணெய் சட்டி சரிந்து பேக்கரி ஊழியர் பலி

57பார்த்தது
மார்த்தாண்டம்: எண்ணெய் சட்டி சரிந்து பேக்கரி ஊழியர் பலி
மார்த்தாண்டம் அருகில் உள்ள உண்ணாமலைக்கடை பகுதியில் பேக்கரி ஒன்று உள்ளது. இந்த பேக்கரியில் வடசேரி பள்ளிவிளையை சேர்ந்த ராம்குமார் (43) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 19ஆம் தேதி உரிமையாளர் வீட்டில் பேக்கரிக்கான பலகாரம் செய்து கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராத விதமாக எண்ணெய் சட்டி சரிந்து கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய் ராம்குமார் உடலில் கொட்டியது. இதில் படுகாயம் அடைந்தவர் உடனடியாக மீட்டுக்குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (மார்ச் 28) ராம்குமார் உயிரிழந்தார். இவருக்கு முத்துராணி என்ற மனைவி உள்ளார். மார்த்தாண்டம் போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி