இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை கோவிலில் மீண்டும் ஒரு மண்டல காலம் இந்த வருடம் தொடங்கியுள்ளது. கார்த்திகை 1-ஆம் தேதி இன்று முதல் இதற்காக பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை நேற்று (15-ம் தேதி) மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
இதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் இன்று அதிகாலை முதலே ஆலயங்களில் சென்று மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியை தொடங்கினார்கள். குமரியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குழித்துறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கோவில்களில் இந்த மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
இதில் மார்த்தாண்டத்தில் உள்ள கோதை ஆற்றின் கரையில் ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் இன்று காலை முதலே சிறியோர் முதல் பெரியோர்கள் வரை ஆலயத்தில் வந்து மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.