மார்த்தாண்டம் கிறிஸ்டல் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் மிதுன் (25). இவர் நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் விரிகோடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜேஷ் (29) திருவரம்பு பகுதி சேர்ந்த சைலன் மகன் ராஜேஷ் (32) என்பவர்களோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இரண்டு பேரும் சென்னையில் உள்ள ஸ்பா சென்டரில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் சென்னையில் விபச்சாரம் நடத்தி வருவதாக மிதுன் கூறியதாக தெரிகிறது.
இதனால் மிதுனுக்கும் இரண்டு ராஜேஷ்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று மிதுன் வீட்டின் முன்பு நின்றார். அப்போது அங்கு வந்த 2 ராஜேஷ்களும் சேர்ந்து வெட்டுக் கத்தியால் மிதுனை வெட்டி, மிரட்டி சென்றுள்ளனர். இதில் காயமடைந்த மிதுன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் 2 ராஜேஷ்கள் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.